000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a மகரதோரணம் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கோட்டத்தின் மேல் அலங்கார வளைவாக அமைக்கப்படும் மகர தோரணம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a வளமையின் குறியீடாக விளங்கும் மகரத்தின் வாயிலிருந்து வெளிப்படும் கொடிப்பாளைகள், கொடிக்கருக்குள், விலங்குகள், மனிதர்கள், அணிகள், கணங்கள், வீரர்கள் ஆகியனவற்றை அலங்கார வளைவாக தோரண அமைப்பில் கோட்டங்களின் மேல் புடைப்புச் சிற்பமாக அமைப்பது மகர தோரணமாகும். மகர தோரணத்தின் நடுவில் அமையும் வட்ட வடிவ மையத்தில் இறையுருவங்கள் வடிக்கப்படும். பெரிய கோயிலில் அமைந்துள்ள மகர தோரணத்தில் நடுவில் அமைந்த புடைப்புச் சிற்பமாக நல்லிருக்கை நாதர் (சுகாசன மூர்த்தி) காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் மீது இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் சிவபெருமான் அமர்ந்துள்ளார். பின்னிரு கைகளில மழுவையும், மானையும் பற்றியுள்ளார். வலது முன் கை அபய முத்திரை காட்டுகிறது. இடது முன் கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. ஜடாமகுடமும் இன்னும் பிறவணிகளும் கொண்ட நல்லிருக்கை நாதரின் இருபுறமும் உயர்ந்த விளக்குகள் காட்டப்பட்டுள்ளன. தலையின் இருபுறமும் சாமரம் வைக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a மகரதோரணம், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000388 |
barcode | : | TVA_SCL_000388 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |